தீபாவளிக்கு ஊர் திரும்பிய பயணிகள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், முதல் முறையாக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகள் எவ்வித போராட்டமும் இல்லாமல், நிம்மதியாக தங்கள் சொந்த ஊருக்கு சென்றதாகவும் நெட்டிசன்கள் பலரும் தங்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பொதுவாக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து பணியாற்றும் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் பண்டிகை நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்பு பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன்’ உள்ளிட்ட போக்குவரத்து பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், பலரும் முன்பதிவு செய்து பயணிப்பார்கள். ஆனாலும், முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் மக்களும் அதிகமாக இருப்பார்கள்.
முன்பதிவு செய்தாலும் செய்யவில்லை என்றாலும், பண்டிகை நெருங்க நெருங்க போக்குவரத்து பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும், அதுவும் குறிப்பாக, பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்பு சரியான பேருந்து கிடைக்காமல், பேருந்து நிலையங்களில் மக்கள் சிக்கல்களை சந்திப்பது, சரியான நேரத்தில் பேருந்துகள் இல்லாததை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது என பல சிக்கல்கள் வரும். ஆனால் இந்த முறை, மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல், சரியான நேரத்தில் தங்கள் பயணத்தை உறுதி செய்துள்ளனர்.
நவம்பர் 8-ந் தேதி (நாளை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நவம்பர் 5 முதல் 7-ந் தேதி (இன்று) வரை சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழகம் முழுவதும் 15,659 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் பேருந்து இல்லை என்ற சிரமத்தை சந்திக்காமல், தங்கள் சொந்த ஊருக்கு கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்துள்ளனர். பயணிகளின் சிரமத்தை போக்க கிளாம்பாக்கம் கடந்து மறைமலைநகரில் தங்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம் செல்வதற்கு இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், அதிகக் கூட்ட நெரிசல் இருந்தபோதிலும், நெரிசலைக் குறைக்க ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளும் 16 கூடுதல் பேருந்து ஏறும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் 30 நிமிடங்களுக்குள் பேருந்துகள் கிடைத்துள்ளது.
தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு, உதவியாக இருந்த ஊழியர்களையும், சீரான வரிசைகளையும், ஜி.எஸ்.டி சாலையில் சீராகச் சென்ற போக்குவரத்துப் ஓட்டத்தையும் பலரும் தங்கள் சமூகவ வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் பேருந்து நிலையத்தைப் பார்வையிட்டு பயணிகளுடன் உரையாடினார்.
அமைச்சருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்த ஒரு சிறுவன் உட்பட அனைவரிடமும் பேசினார். மேலும் மலிவு விலையில் குடிநீர் வழங்குதல் மற்றும் சிக்கல்களுக்கு உடனடியான காணப்பட்ட தீர்வுகளை சுட்டிக்காட்டினார். கூடுதல் இணைப்புப் பேருந்துகளும் காவல்துறையின் உதவியும் குடும்பங்கள் எந்தவித மன அழுத்தமும் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல உதவியாக இருந்தன என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இது குறித்து பிரசாத் ரங்கசாமி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த தீபாவளி பயணக் காலத்தில் கிளிம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து கிட்டத்தட்ட எந்தப் புகாரும் இல்லை! ஏற்பாடுகள், ஓட்டுநர்கள் முதல் முனையத்திற்கு வெளியே தடையற்ற போக்குவரத்து வரை – போக்குவரத்து அமைச்சருக்குப் பாராட்டுக்கள். தமிழன் பார்த்திபன் அண்ணா! உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துவிட்டது! என்று பதிவிட்டுள்ளார்.
வெங்கடேஷ் என்பவர், முன்பதிவு தேவையில்லை, ஆனாலும் தீபாவளி பண்டிகையால் உச்சக் கூட்ட நேரத்திலும் கூட, வெறும் 30 நிமிடங்களுக்குள் எங்களுக்குப் பேருந்து கிடைத்தது! எல்லா இடங்களிலும் சேவை மையங்கள், ஊழியர்கள் பயணிகளுக்கு உடனடியாக உதவுகிறார்கள். சிறப்பான கள அளவிலான மேலாண்மை! த.வெ.க.வுக்கு பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் என்பவர் நாளை மறுநாள் தீபாவளி. இன்று எல்லோரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்படுகிறார்கள், ஆனால் போக்குவரத்து வழக்கம் போல் இருக்கிறது. குறிப்பாகக் கீளம்பாக்கத்தில், சுத்தமாலா. மூவிங் லாயே தன் இருஞ்சு. சுமா கோடா நிக்கலா. இந்த முறை நல்ல திட்டம் பண்றீங்க.. நல்ல வேலை. தமிழன் பார்த்தின் அண்ணா என்று பதிவிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





