--- --:--:-- --

திருமணம் செய்வதாக கூறி நூதன முறையில் ஆண்களை ஏமாற்றிய பெண்..!

3

திருமணம் செய்வதாக கூறி நூதன முறையில் ஆண்களை ஏமாற்றிய பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்த சோபிகா என்பவர் மணமகன் தேவை என இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதனை பார்த்து திண்டுக்கல்லை சேர்ந்த செல்வம் என்பவர் அவரை அணுகி யுள்ளார். குடும்பத்தினருடன் பார்க்க புதுச்சேரிக்கு சென்று உள்ளனர் அப்போது மாப்பிள்ளையை பிடித்து விட்டதாக கூறிய நிலையில் இரண்டு சவரன் செயின் பட்டு சேலை மற்றும் தங்க காசுகள் கொடுத்து நிச்சயம் செய்துவிட்டு திண்டுக்கல் திரும்பியுள்ளனர்.

 

பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது தொலைபேசி எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் பாண்டிச்சேரி சென்று விசாரித்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் இந்த பெண் இதேபோல் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக கூறுகின்றனர்.

 

இதைப்போல் திண்டுக்கல் வந்த அந்த பெண்ணை செல்லபாண்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon