எல்லாவற்றுக்கும் தி.மு.க தான் என்பார்கள் – உதயநிதி ஸ்டாலின்
புத்தக கொள்முதல் சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எந்த கேள்விக்கும் த.வெ.க அரசு பதில் சொல்லாது. எல்லாவற்றுக்கும் தி.மு.க தான் காரணம் என்பார்கள்.
நாங்களும் முழுமையான, முறையான விசாரணைக்கு தயாராகவே உள்ளோம். நூல் கொள்முதல் குளறுபடி தி.மு.க ஆட்சியில் நடந்திருக்காது என்பதில் 100% உறுதியாக உள்ளேன். சில புத்தகங்களின் பெயர்களை பார்த்தாலே எந்த ஆட்சியில் ஊழல் நடந்தது எனத் தெரியும்” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




