தடுப்பூசி போடாமலேயே போட்டதாக வந்த சான்றிதழ்..!
மயிலாடுதுறையில் இரண்டாம் தவணை கொரொனா தடுப்பூசி போட சென்றவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் ஆன்லைனில் சான்றிதழும் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேந்தகுடி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஏற்கனவே கோவாக்ஸின் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திய நிலையில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக அருகே உள்ள அரசு பள்ளியில் தடுப்பூசி முகாமிற்கு சென்று உள்ளார்.
அப்போது ஏற்கனவே அவருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி விட்டதாக கூறி சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சான்றிதழ் வந்துள்ளது.
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசியை செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





