தமிழகத்தில் 20 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு..!
தமிழகத்திலும் 20 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொள்வது நல்லது எனக் கூறினார்.






