மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைப்பு
வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தாராபுரத்திற்கு அமைச்சர் அருண்குராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தொகுதிகளுக்கான இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் ஆகியோர் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




