திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – துரை வைகோ வலியுறுத்தல்
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க எம்.பி. துரை வைகோ, “திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும். திருச்சியை தமிழ்நாட்டின் 2ஆவது தலைநகராக அறிவிக்க முதல்வரிடம் ஏற்கெனவே வலியுறுத்தினேன்.
இதுவே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் கனவு பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் வந்தால் மீனவ மக்கள் பாதிக்கப்படுவர். சென்னையில் போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கடி அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் திருச்சிக்கு 3 மணி நேரத்தில் வந்துவிடலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




