--- --:--:-- --

அபராத தொகையை செலுத்த விருப்பமில்லை..!

5

கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு 25 லட்சம் ரூபாய் கடந்தாண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அபராதமாக ஒரு லட்சம் செலுத்த விரும்பவில்லை எனவும் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை வசூலிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

இந்த அபராத தொகையை இரண்டு வாரங்களில் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 

இந்த நிலையில் இறக்குமதி வரியை செலுத்துவதாகவும், ஏற்கனவே கடந்த ஆண்டு 25 லட்சம் ரூபாய் கொரொனா நிவாரண தொகை செலுத்த பட்டதாகவும் அபராதமாக ஒரு லட்சத்தை செலுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon