--- --:--:-- --

நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற பெண் நிர்வாகி மீது புகார்..!

6

டிகர் விஜய்யின் ரசிகர் மன்ற பெண் நிர்வாகி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமலிசையைச் சேர்ந்த திவ்யா என்பவர் இந்த புகாரை அனுப்பி வைத்துள்ளார்.

 

திவ்யாவுக்கும், முத்து என்பவருக்கும் 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 200 சவரன் நகை கொடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகு தனது கணவர் பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா குறிப்பிட்டுள்ளார் .

 

மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணி மாவட்ட செயலாளராக உள்ள ஏஞ்சல் என்பவருடன் திருமணத்தை மீறிய பந்தத்தில் இருப்பதாகவும் திவ்யா குற்றம்சாட்டி இருக்கிறார். பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon