தனுஷ் உடன் மீண்டும் நடிக்க ஆசை எனக்கூறிய சாய் பல்லவி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி நடிகர் ராணாவுடன் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

 

இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது. தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை பிரபல டாலிவுட் இயக்குனர் இயக்க உள்ளார்.

 

நடிகை சாய் பல்லவி ஏற்கனவே மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெறும் ரவுடிபேபி பாடலுக்கு இவர்கள் இருவரும் ஆடிய நடனம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இறுதியாக கொடுத்த பேட்டி ஒன்றில் நீங்கள் இதுவரை நடித்த நடிகர்களில் யாருடன் மீண்டும் நடிக்க ஆசை என்று கேட்டதற்கு தனுஷ் தான் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

 


Leave a Reply