--- --:--:-- --

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை..!

4

புதிய தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படாது என்றும் பல வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் எனவும் பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

இது தொடர்பாக அந்த நிறுவனம் தனது வலைதளத்தில் அளித்த விளக்கத்தில் புதிய கொள்கைகளை மறுஆய்வு செய்ய அவகாசம் வழங்கப்படும் என்றும் அதன்பின் சில வாரங்களுக்கு பிறகு நினைவூட்டல் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

பின்னர் படிப்படியாக சேவைகள் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ள நிறுவனம் இதன்படி பயனாளர்கள் ஷார்ட்லிஸ்டட் பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

ஆனால் இன்கமிங், வாட்ஸ்அப் அழைப்புகள் வீடியோ கால் பேச முடியும் என்றும் நோட்டிபிகேஷன் ஆன் செய்திருந்தால் குறுந்தகவல்களை படித்து பதில் அளிக்க முடியும் என்றும் மிஸ்ட் போன் மற்றும் வீடியோ கால் களை அழைத்து பேச முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

அதன்பிறகு புதிய கொள்கையை ஏற்காவிட்டால் குறுந்தகவல் அனுப்புதல் இன்கம்மிங் கால்களும் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon