--- --:--:-- --

வங்கக்கடலில் நாளை உருவாகிறது ‘முரசு’ புயல்..!

2

வங்கக்கடலில் நாளை முரசு புயல் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், “தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் – நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08:30 மணி நிலவரப்படி, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் – நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.

 

 

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் அதே பகுதியில் ‘காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ வலுப்பெறக்கூடும். அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து ‘புயலாக’ மாறக்கூடும்.

 

மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 2 நவம்பர் 2026 அன்று மாலை வாக்கில் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில், மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதியைச் சென்றடையக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த புயலுக்கு இந்தியா அளித்த முரசு என்கிற பெயர் சூட்டப்படும் எனத் தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon