மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட இளைஞர்..!
செங்கல்பட்டு குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தில் இருந்து வாலிபர் குதித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை பல்லாவரத்தை அடுத்த குரோம்பேட்டை மேம்பாலத்தில் இருந்து ஒருவர் திடீரென விழுந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
அதன் முதற்கட்டமாக தற்கொலை முயற்சிக்கு தான் குதித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.






