--- --:--:-- --

திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு?

Election 02

திருப்பூர் மாவட்டத்தில் 67.48 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. துல்லியமான அதிகாரபூர்வ வாக்குப்பதிவு நிலவரம் தேர்தல் ஆணையம் இன்றிரவு வெளியிடும் என்று தெரிகிறது.

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது; கொரொனா பாதிப்பு உள்ளவர்களுக்கு மாலை 6 – 7 மணி வரை வாக்களிக்க அனுமதி தரப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் முதல் பாதி நாளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

 

குறிப்பாக திருப்பூர் நகரப்பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் பலர் வந்து செல்வதை பார்க்க முடிந்தது. எனினும் மதியத்திற்கு பிறகு பொதுவாக்க எல்லா தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

 

இன்று மாலை 7 மணி நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தின் சராசரி வாக்குப்பதிவு 67.48 சதவீதம் ஆகும். மாலை 5 மணி நிலவரப்படி திருப்பூர் வடக்கில் 9%, திருப்பூர் தெற்கில் 58.23%, அவிநாசியில் 66.82%, தாராபுரத்தில் 63.78%, காங்கேயத்தில் 63.14%, மடத்துக்குளத்தில் 67.76%, உடுமலையில் 64.451%, பல்லடத்தில் 61.50% வாக்குகள் பதிவாகி இருந்தன.

 

எனினும் துல்லியமான மற்றும் அதிகாரபூர்வ வாக்குப்பதிவு நிலவரம் இரவில் வெளியாகும் என்று தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon