--- --:--:-- --

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்..!

1

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் வழக்கமான திருமண நிகழ்ச்சிகள் மதச்சடங்குகள் போன்றவற்றிற்கு தடை இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி நாளை இரவு 7 மணி முதல் வரும் 7-ஆம் தேதி காலை 7 மணி வரை இரு சக்கர வாகன பேரணி தடை செய்யப்பட்டுள்ளது. நாளை இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை கூட்டமாக கூடுதல் பொதுக் கூட்டங்கள் நடத்துவது பதாகைகளை ஏந்திச் செல்வது கோஷமிட ஒலிபெருக்கியை பயன்படுத்துவது ஆகியவை முற்றிலும் தடை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

 

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்று உள்ளூர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதுவரை 42 கோடியே 12 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணம் நகை பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon