ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டபைத் தேர்தல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் மாலையுடன் நிறைவு பெறுகிறது.
அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், திமுக ஐ.டி.விங் மாநில துணை செயலாளர் கார்த்திக் மோகன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.
தேர்தல் வெற்றிக்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய அதிகளவில் தொகை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




