தனியார் உணவகத்தில் நள்ளிரவு நடைபெற்ற திடீர் சோதனை..!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் நள்ளிரவு நடைபெற்ற திடீர் சோதனையில் 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
புதூர் மெட்டுகுலம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான உணவகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதற்காக சிலர் பட்டியல் தயாரிப்பதாக வந்த புகாரையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆசிரியருமான சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நள்ளிரவு ஒரு மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு காட்பாடி தொகுதி வாக்காளர்கள் விவரம் அடங்கிய அதிமுக வேட்பாளர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள் கட்டுக்கட்டாக இருப்பதும் சிலருக்கு அவர்களின் பணத்தை பிரித்துப் போடும் பணியை மேற்கொண்டு இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த இடத்திலிருந்து எட்டு பேரையும் பிடித்த காவல்துறையினர் காட்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனது உணவகத்தில் இருந்து பதினெட்டு லட்சம் ரூபாயும் சிலரின் பெயர் குறிப்பிடப்பட்ட பட்டியல்கள் செய்யப்பட்டது.
இந்த சோதனை நள்ளிரவு ஒரு மணி முதல் 3:30 வரை நீடித்துள்ளது. பிடிபட்ட தொகை அதிமுக விற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட 18 லட்சம் ரூபாய் பணம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்த்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.






