தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ள நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 70 காசுகள் குறைந்து, 71 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ஆயிரத்து 700 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.






