அதிகாரிகளின் அலட்சியத்தால் தன் மகளின் மருத்துவ கனவு கலைந்துவிட்டது..!
அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தன் மகளின் மருத்துவ கனவு கலைந்து விட்டதாக வேதனைப்படுகிறார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை சேர்ந்தவர் சந்திரலேகா.
அரசு பள்ளி மாணவியான அவரை மருத்துவராக விட வேண்டும் என்பதுதான் தாயின் கனவு. அதற்கு ஏற்ப கடும் பயிற்சிகளை மேற்கொண்ட சந்திரலேகா நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் பத்தாம் இடம் பிடித்தார்.
மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்களின் 271 வது இடம் கிடைத்ததால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கீழ் நிச்சயம் தன் மகளுக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும் என சந்திரலேகாவின் பெற்றோர் காத்திருந்தனர். ஆனால் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கடிதம் கூட கிடைக்கவில்லை.
அதனால் இந்த கல்வியாண்டு வீணாக்க விரும்பாத சந்திரலேகா அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் வழியில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். தற்போது அவரது வீட்டிற்கு வந்து அரசு கடிதத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்று இடங்களில் இருந்த போதும் அதை தேர்வு செய்ய விருப்பம் இன்றி சந்திரலேகா விலகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி நிலையத்தின் தேர்வுக்குழு செயலாளரிடம் கேட்டதற்கு விண்ணப்பத்தில் அரசுப்பள்ளி மாணவர் என்ற கேள்விக்கு சந்திரலேகா இல்லை என பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும் அவரை பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு அழைத்ததாகவும் அது குறித்து கடிதம் எழுதும் வரவில்லை எனக் கூறப்படுவதால் விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். விண்ணப்ப முறை சிக்கலாக உள்ளதா அல்லது விண்ணப்பத்தை முழுமையாக படித்து உள்வாங்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு நமது கல்விமுறை இல்லையா என பல கேள்விகளுக்கு இந்த சம்பவம் வித்திடுகிறது.






