--- --:--:-- --

காற்று காரணமாக கர்ப்பம் அடைந்து விட்டதாக கூறிய பெண்..!

6

ந்தோனேசியாவில் பெண் ஒருவர் தான் காற்று காரணமாக கர்ப்பம் அடைந்து விட்டதாக கூறிய சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 25 வயதான சிட்டி சைனா என்ற பெண் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வந்தவர் வந்துள்ளார்.

 

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அதற்கான காரணமாக சிட்டி சைனா கூறுவது பலரையும் கலங்க வைத்துள்ளது. அந்தப் பெண் ஒரு நாள் எனது அறையில் தூங்கி கொண்டு இருந்தேன்.

 

அப்பொழுது பலத்த காற்று வீசியது. அடுத்த 15 நிமிடங்களில் வயிறு வலித்தது. பின்னர் வயிறு பெரிதாகியது என தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த சிட்டி சைனா கூறியுள்ளார்.

 

வினோதமான கர்ப்பம் பற்றிய செய்தி காட்டுத் தீயாய் பரவ தொடங்கியதையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தியை கேட்ட பலருக்கும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon