விண்கலத்தை வழிநடத்திய இந்திய வம்சாவளிப் பெண்..!
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கிய பேர்சேவேரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தியது இந்திய வம்சாவளியான சுவாதி மோகன் என்பது தெரியவந்துள்ளது.
சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசாவால் கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்ட பேர்சேவேரன்ஸ் ரோவர் விண்கலம் சுமார் 6 மாத பயணத்திற்கு பின்னர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இத்திட்டத்தின் வழிகாட்டுதல் பிரிவின் தலைவராக இருந்தது இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானியான டாக்டர் ஸ்வேதா மோகன் என்பது தெரியவந்துள்ளது.
செவ்வாயில் பெர்சேவரன்ஸ் வெற்றிகரமாக தரையிறங்கியதில் முக்கிய பங்கு வகித்த ஸ்வாதி கர்நாடகாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர்.






