--- --:--:-- --

இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு..!

1

மிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம் செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி வேளாண் துறை இணை செயலாளராக இருந்த ஆனந்த் மற்றும் சுகாதாரத்துறை இணை செயலாளராக இருந்த அஜய் ஆகிய இருவரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் இருவரும் நியமனம் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஓராண்டு வரை அல்லது தேவை இருக்கும் வரை இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon