--- --:--:-- --

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இன்று பதவியேற்கவுள்ளார் தமிழிசை..!

8

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இன்று பதவியேற்கவுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அந்த மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்த சூழலில் துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். மேலும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பிரமாணம் செய்து வைக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon