உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் விரைவில் தொடங்கும்.!

ரு கொரொனா தடுப்பூசி மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் விரைவில் தொடங்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

தேசிய அளவியல் மாநாட்டில் காணொளி வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் வேண்டும் என்றார். தரத்தின் அடிப்படையில் இந்திய பொருட்கள் குறித்த நம்பிக்கையை உலகளவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

 

இந்திய விஞ்ஞானிகள் இரண்டு கொரொனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளனர் என்றும் அதன்மூலம் தேசமே பெருமை கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் விரைவில் தொடங்கும் என பிரதமர் தெரிவித்தார்.


Leave a Reply