--- --:--:-- --

அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம், கள் இறக்கக் கூடாதா? – சீமான் ஆவேசம்

6

மிழ்நாட்டில் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

 

 

‘கள்’ தமிழர்களின் தொன்மையான வாழ்வியலோடும், பண்பாட்டோடும் இரண்டற கலந்ததாகும். பதநீர், பனங்கருப்பட்டி, பனைவெல்லம் உள்ளிட்ட பல்வேறு பனைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசு, அதே பனையிலிருந்து பெறப்படும் கள்ளுக்கு மட்டும் தடையைத் தொடர்வது ஏன்? தமிழ்நாட்டின் மாநில மரம் பனை என்பது தவெக அரசுக்கு தெரியுமா? தெரியாதா? ‘கள்’ போதைப்பொருள் என்றால், அரசு டாஸ்மாக்கில் விற்பது என்ன புனிதத்தீர்த்தமா? அரசு விற்கும் மலிவு விலை மதுதான் மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கிறதே அன்றி, நம் நாட்டு ‘கள்’ அல்ல; மது விற்பவர்களுக்கு சீருடை, ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிப்பதும், உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களைத் திறப்பதும், இணையம் வாயிலாக மதுவிற்பனை செய்வதும்தான் தவெக அரசு மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் முறையா? அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத்தொழிலாளி ‘கள்’ இறக்கக்கூடாதா? – சீமான்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon