இறந்தவரின் உடல் தகனத்தின் போது உயிரிழந்த 23 பேர்..! காரணம் என்ன?

த்திரபிரதேசத்தில் முதியவர் ஒருவரின் உடல் தகனத்தின் போது சுடுகாட்டில் உள்ள கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காசியாபாத் மாவட்டத்திற்குட்பட்ட மொராட் நகருக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது.

 

இங்கு ஜெயராம் என்ற முதியவரின் உடலை தகனம் செய்ய கொண்டு வந்த போது பலத்த மழை பெய்தது. இதனால் இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஏராளமானோர் அங்குள்ள ஒரு கட்டத்தில் ஒதுங்கி நின்றனர். அப்போது அந்த கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

 

இதில் கட்டிடத்தில் ஒதுங்கி இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த பயங்கர சம்பவத்தில் 23 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தரம் குறைந்த கட்டுமான பொருட்கள் மூலம் கட்டிடம் கட்டப்பட்டது இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

 

மேலும் இந்த துயர சம்பவத்திற்கு குடியரசு தலைவர் பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply