ஜார்ஜியா மாநிலத்தில் தான் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர் டிரம்ப் பேசும் ஆடியோ வெளியாகி அமெரிக்காவில் அனலை பற்ற வைத்துள்ளது.
ஜார்ஜியாவில் 11,779 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோபைடனிடம் தோற்றதால் டிரம்ப் அந்த மாநிலத்தில் தேர்தல் வாக்குகளையும் இழந்தார். இந்த நிலையில் ஜார்ஜியா அமைச்சர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் 11,780 வாக்குகளை தயார் செய்து வெற்றி பெற்றதாக அறிவிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்பது போன்ற ஆடியோ டேப் அமெரிக்க ஊடகங்களில் வெளியானது.
அதற்கு அந்த அமைச்சர் பிராண்ட் ரஃபென்ஸ் பர்கர் மறுப்பு தெரிவித்து இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு கட்டத்தில் கள்ள வாக்குகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் விளைவு ஆபத்தாக இருக்கும் என டிரம்ப் மிரட்டுவதும் ஆடியோ டேப்பில் இடம்பெற்றுள்ளது.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.யை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற கார்..!
நாய்க்கு பயந்து ஓடி 2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி..!
பட்டியலின மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்..!
பவரை நான் எடுத்துக் கொள்வேன்.. பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..!
திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு..!
செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை..மருத்துவமனை முன்பு திடீர் போராட்டம்..!