துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி..!

ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

பள்ளேரி, கொண்ட குப்பம் மற்றும் மருதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற துரைமுருகன் பொதுமக்களிடம் உரையாற்றினார்.

 

கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை செல்லவிருந்த துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் மேல்விசாரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Leave a Reply