--- --:--:-- --

கோவை : எத்தனை தடைகள் வந்தாலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள ரூ.2500 பொங்கல் பரிசுத்தொகுப்பு மக்களுக்கு சென்று சேரும் – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு !!!

1.1

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.அப்போது,அவர் பேசுகையில்
கோவை மாவட்டத்தில் 10,11,845 குடும்பத்திற்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது எனவும்,கொரோனா காலத்தில் மக்கள் நெருக்கடியில் இருப்பதால் தமிழக முதல்வர் 2500 ரூபாயாக தொகையை உயர்த்தி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,பொங்கல் தொகுப்பில் முதலில் கரும்பு துண்டு கொடுக்கப்பட்டது. இப்போது முழுக்கரும்பு கொடுக்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர், தமிழகம் முழுவதும் உள்ள 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றார். ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது 100 ரூபாய் கொடுத்து இந்த பரிசு தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்ததாக குறிப்பிட்ட அவர் மக்களுடன் இருந்து முதல்வரானவர் என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எளிமையாக இருக்கின்றார் என புகழாரம் சூட்டினார்.

 

மேலும்,ரூ.2500 மக்களுக்கு வழங்குவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரு கும்பல் இருக்கின்றது எனவும், எந்த தடைகள் வந்தாலும் 2500 ரூபாய் மக்களை சென்று சேரும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ். பி.வேலுமணி கோவை மாவட்டத்திற்கு 269.83 கோடி ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும்,ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என அவரது அண்ணன் மு.க.அழகிரியே தெரிவித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon