--- --:--:-- --

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் திறப்பு எப்போது..?

2

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரொனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

 

ஆனால் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு நெறிமுறைகள் சினிமா படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon