--- --:--:-- --

பாடகர் எஸ்‌பி‌பி விரைவில் நலம்பெற வேண்டி இளையராஜா தனது வீட்டில் நடத்திய பிரார்த்தனை..!

3

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை 12 ஆம் தேதி கவலைக்கிடமானது. இதையடுத்து அவர் சுவாசிக்க உதவும் வகையில் எக்மோர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே எஸ்பிபி குணமாக இசையமைப்பாளர் இளையராஜா தனது வீட்டில் பிரார்த்தனை நடத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon