--- --:--:-- --

ஸ்ரீசைலம் மின்நிலையத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்து..!

4.1

தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ சைலம் மின் நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை பிரிக்கும் கிருஷ்ணா நதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைல அணையின் இடது கரையில் அமைந்துள்ள நிலத்தடி நீர் மின் நிலையத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டு நான்காவது அலகு வெடித்து சிதறியது.

 

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயில் சிக்கிக் கொண்ட 10 ஊழியர்களை மீட்டனர். அவர்களில் 6 பேர் ஸ்ரீசைலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 ஊழியர்கள் தீயில் சிக்கிய நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்தால் அந்த பகுதியில் அடர்த்தியான புகை சூழ்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon