--- --:--:-- --

கொரோனாவால் வேலை இழந்து பெண் குழந்தையுடன் தவிக்கும் விதவை பெண்: அடுத்த கட்ட நிலையை எண்ணி கண்ணீர் !!!

daec9c26-2946-4b8b-9757-498f27badd30

கோவையில் கொரோனாவால் வேலை இழந்து பெண் குழந்தையுடன் செய்வதறியாமல் தவிக்கும் விதவை பெண், இந்த மாதமும் வேலை கிடைக்கவில்லை எனில் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக கண்ணீர் வடிக்கிறார்.

 

கோவை லாலி சாலை முனியப்பன் கோவில் வீதியில் வசித்து வருபவர் வத்சலா(49). திருமணமாகி 11 மாதத்தில் கர்ப்பிணியாக இருக்கும் போதே கணவரை இழந்த வத்சலா கடந்த 12 ஆண்டுகளாக பெண் குழந்தையை தனி ஒருவராக வீட்டு வேலை செய்து வளர்த்து வருகிறார்.வீட்டு வேலை செய்து இத்தனை ஆண்டுகளாக கண்ணியமாக முன்னெடுத்து வந்த வாழ்க்கையில் இடியாக வந்தது கொரோனா.

ஆசை பாழாகிவிட்டது

வேலை இழந்து கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கும் வத்சலா வாழ்க்கையின் ஒரே பிடிப்பான தனது பெண் குழந்தையை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையும் பாழாகிவிட்டதாக கூறுகிறார்.பணம் இல்லாததால் தனியார் பள்ளியில் படித்து வந்த மகளின் படிப்பை தொடர முடியாமல் மாற்று சான்றிதழ் பெற விண்ணப்பித்து விட்டார்.

 

மேலும்,கொரோனா கட்டுப்பாட்டால் வேலை கொடுத்தவர்கள் கூட வீட்டினுள் அனுமதிக்க மறுப்பதால் வேலையில்லா சூழல் இருந்து வருவதாகவும், எங்கும் புதிதாக வீட்டு வேலைக்கு யாரும் அழைக்க தயாரில்லை என்ற சூழலே நிலவுவதாக தெரிவிக்கும் வத்சலா வேலை கிடைக்காததால் உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வரும் நிலையில் வரும் மாதத்திலும் பணி எதுவும் கிடைக்கவில்லை.

Subscription

அரசு தரப்பில் உதவி வேண்டும்

ஏற்கனவே 5 மாத வாடகை பாக்கி மற்றும் தனியார் நிறுவனத்தில் பெற்றுள்ள மகளிர் குழு கடன்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் தான் என்ன செய்வது எனத்தெரியவில்லை என்றும் , வாழ்வா சாவா என தன் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருப்பதால் மகளுக்கு கல்வி உதவி,மகளிர் குழு கடன்களுக்கு வழிவகை செய்து தன் வாழ்வாதாரத்தை காக்க சுயமாக தொழில் செய்ய அரசு தரப்பில் உதவி கிடைத்தால் தன்னால் இந்த துயரில் இருந்து மீள முடியும் என வேதனையுடன் கோரிக்கையை முன் வைக்கிறார் அந்த பெண்.

 

வேலை அல்லது வாழ்வாதாரத்திற்கு ஏதாவது உதவி கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

https://play.google.com/store/apps/details?id=kuttram.kuttrame

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon