புதிய தேசிய கல்விக் கொள்கை – 12ம் வகுப்பு வரை இலவச கட்டாயம் கல்வி
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து அவற்றில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயர், மத்திய கல்வி துறை அமைச்சகம் என்று பெயர் மாற்றத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆறாம் வகுப்பு வரை தாய் மொழியிலோ அல்லது மாநில மொழியிலோ கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கை வரைவு முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். உயர் கல்வி முறையை முழுமையாக ஒழுங்கு முறைப் படுத்துவது உலகளாவிய பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ அனுமதி அளிப்பது ஆகியவை புதிய தேசிய கல்வி கொள்கை வரைவில் முக்கிய அம்சங்களாகும்.
இதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளில் உயர்கல்வியில் 50 சதவீதமும், பள்ளி கல்வியில் 100 சதவீத மாணவர்கள் சேர்க்கை உறுதிப்படுத்தப் படும் என்று கூறப்பட்டுள்ளது.






