3 நிமிடங்களில் 100 ஆசனங்களை செய்த 11 வயது சிறுமி..!

துபாயில் வசிக்கும் 11 வயது இந்திய சிறுமி ஆனால் சம்ரிதி காலியா என்பவர் சிறிய பெட்டி ஒன்றில் இருந்தவாறு 3 நிமிடங்களில் 100 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளார். உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா பார்வையாளர் மாடத்தில் இருந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

 

ஆறு வயது முதல் யோகா பயிற்சி பெறுபவர் ஆவார். அது தொடர்பான பல போட்டிகளில் தேசிய சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார். ஆர்டிஸ்ட் மற்றும் யோகா கலையில் வல்லவர் என கூறப்படுகிறது. இதற்கு முன் இரண்டு முறை யோகா கலையை பலவிதங்களில் வெளிப்படுத்துவதற்காக அவர் உலக சாதனை படைத்துள்ளார்.


Leave a Reply