--- --:--:-- --

பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில்..!

3

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு தெரிவிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளை பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடக்கத் தொடங்கியுள்ளன.

 

இந்த நிலையில் ஆகஸ்ட், செப்டம்பர் ,அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு தெரிவிக்குமாறு மாநில அரசுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

பள்ளிகள் திறக்கப்படும் போது கல்வி நிறுவனங்கள் என்ன வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விவரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் பெற்றோரின் கருத்துக்களையும் மாநில அரசின் கருத்துகளையும் சேர்த்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கல்வித்துறை என்று பதில் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

தமிழக அரசைப் போல் தெலுங்கானாவும் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. இது தவிர பிற அண்டை மாநிலங்களான ஆந்திரா செப்டம்பர் 5ம் தேதியும், கேரளா ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு, கர்நாடகா செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகும் திறக்கலாம் என்று அந்தந்த மாநில கல்வித்துறை சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon