காவல் ஆய்வாளர் எனக்கூறி இலவசமாக காய்கறியை மிரட்டி வாங்க முயன்ற நபர்!
பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஒருவன் காய்கறிகளை நூதனமாக கொள்ளை அடிக்க முயன்றுள்ளான். திருவள்ளூர் திருமழிசை காய்கறி சந்தையில் தன்னை காவல் ஆய்வாளர் என கூறிக்கொண்டு வியாபாரியிடம் இலவசமாக காய்கறி கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
அறுபது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னை காவல் ஆய்வாளர் எனக் கூறி இலவசமாக காய்கறி வழங்குமாறு வியாபாரியை மிரட்டியுள்ளான். சந்தேகமடைந்த வியாபாரி போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் விசாரணையில் அவர் எம்கேபி நகரை சேர்ந்தவர் என்பதும் இது போன்ற பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






