--- --:--:-- --

ரூ.78.76 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கருமத்தம்பட்டி டி.எஸ்.பி அலுவலத்தை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

8.2

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியி்ல் ரூ.78.76 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கருமத்தம்பட்டி டி.எஸ்.பி அலுவலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

அதனையடுத்து சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட எஸ்.பி.சுஜித் குமார் ,ஏ.எஸ்.பி.அனிதா,கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.பாலமுருகன்,இன்ஸ்பெக்டர் சண்முகம்,எஸ்.ஐ.க்கள் அரவிந்தராஜ்,கருமத்தம்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏ.சி.மகாலிங்கம்,சூலூர் ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு,தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன்,உதவி பொறியாளர் ஜானகி ராமன்,தொழில் நுட்ப உதவியாளர் செல்வமணி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனையடுத்து டி.எஸ்.பி.முகாம் அலுவலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon