இராமேஸ்வரத்தில் கோவில்களை திறக்க கோரி ஒற்றைக்காலில் நின்று போராட்டம்!
மத்திய அரசு வழிபாட்டு தலங்களை கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதி அளித்தது மேலும் அந்த நெறிமுறைகளின்படி புதுச்சேரி , கேரளா உட்பட பல மாநிலங்களில் கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து , மக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன .
மத்திய அரசின் வழி காட்டுத்தலின்படி ஆலயங்கள் திறக்க அனுமதிக்கவில்லை என்று கூறிவந்த தமிழக அரசு , மத்திய அரசு அனுமதி அளித்தும் ஆலயங்களைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பியவாறு இந்து ஆலய வழிபாடு என்பது கூட்டு வழிபாடு கிடையாது அதனால் , தனி நபர் இடைவெளி கடைப் பிடிப்பது பொது சுகாதாரம் பேணுவது எளிதானது . காலை , மாலை வேளைகளில் , 3 முதல் 4 மணி நேரம் , சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க வைத்து முக்கிய சன்னதிகளில் மட்டும் தரிசனத்திற்கு அனுப்ப வழி ஏற்படுத்த முடியும்.
கோவில்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் இன்று (புதன்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் – முன்பும் , பொது மக்களையும் ஒன்றிணைத்து இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனைப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் இராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






