--- --:--:-- --

பால்வெளி மண்டலத்தில் இருந்து கேட்கும் மர்ம ஒலி..! ஆய்வு தகவல் என்ன?

14

விண்வெளியில் மிக நீண்ட தூரத்திலிருந்து வரும் மர்மமான சப்தங்கள் கருந்துளையில் இருந்து வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பால்வெளி மண்டலத்திலிருந்து ஒவ்வொரு 157 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் கேட்கும் மர்ம ஒலி கடந்த 2007ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

 

ஆனால் அவை வேற்று கிரகவாசிகளின் தொடர்பு அலையா என்றும் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஒலி அலைகள் குறித்து இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜோட்ரல் பகுதியிலுள்ள லோவெல் இன்று அதிநவீன தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

 

தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. நீண்ட தொலைவிலிருந்து வரும் அந்த ஒலி அலைகள் கருந்துளையில் இருந்து வந்திருக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மான்செஸ்டர் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon