--- --:--:-- --

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தலைவர்கள்!

2

திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மறைவுக்கு தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெ அன்பழகன் மறைவு தமிழக மக்களுக்கும் திமுகவினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் அவர் எதற்கும் அஞ்சாத சிங்கம் அன்பழகன் மறைவு தாங்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். மனதில் பட்டதை துணிச்சலாக பேசக்கூடியவர் ஜெ அன்பழகன் என்றும் திமுகவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்தவர் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

அன்பழகன் மறைவு திமுகவிற்கு மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கும் பொது வாழ்விற்கும் ஈடற்ற இழப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ஜெ அன்பழகன் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மனம் வருத்தம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அன்பழகன் மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் முருகன் அவருடைய குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் மக்களவை தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

கொரொனா பாதிப்பால் அன்பழகன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றகழக பொதுச்செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெ அன்பழகன் மறைவால் திமுக தலைவர் ஸ்டாலின் தன் வலக்கரத்தை இழந்திருப்பதாகவும் செயல் சிங்கத்தை இழந்து இருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon