இளைஞரை 10 அடி தூரத்தில் நிறுத்தி பரிசோதனை செய்த மருத்துவர்..!
விழுப்புரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டை வலிக்கு சிகிச்சை பெறவந்த வரை பத்தடி தூரத்தில் நிறுத்தி மருத்துவர் சோதனை செய்ததாக வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டைவலி மற்றும் சளிக்காக இளைஞர் ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் பிரகாஷ் என்பவர் இளைஞரை பத்தடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி டார்ச் லைட் அடித்து பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அருகில் இருந்தோர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனிடையே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படாததால் இளைஞரை தூரத்தில் இருக்க வைத்து மருத்துவ பரிசோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.






