கொரோனா வார்டில் இருந்து மாயமான முதியவர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரொனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவர் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிகரணையை சேர்ந்த 62 வயது முதியவர் கடந்த 29ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரொனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

திடீரென வார்டில் இருந்து காணாமல் போன முதியவரை மருத்துவர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை புறகாவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 

காணாமல் போன முதியவரை காவல்துறையினர், சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவமனை முழுவதும் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த முதியவர் தாமாகவே கொரொனாவார்டிற்கு திரும்பினர்.

 

காவல்துறையினர் விசாரித்தபோது தேநீர் அருந்த வெளியே போனதாகவும் கடைகள் எதுவும் இல்லை என்பதால் திரும்பி வந்ததாகவும் சர்வசாதாரணமாக கூறியுள்ளார். கொரொனாவின் தீவிர தன்மை குறித்து விழிப்புணர்வு இல்லாத முதியவரின் செயல் காவல் துறையினரையும் மருத்துவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


Leave a Reply