தமிழகத்தில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.170 கோடிக்கு மது விற்பனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொது முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அத்தியாவசியக் கடைகளுடன், மேலும் பல கடைகள் நேரக்கட்டுப்பாட்டுடனும்சமூக இடைவெளியைப் பின்பற்றியும் செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது.

 

இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் மதுபானக் கடைகளான டாஸ்மாக் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மதுக்கடைகளைத் திறப்பதற்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

அதன்படி, நேற்று வயது வாரியாக நேரக்கட்டுப்பாடுகளுடன் சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மொத்தம் 1,700 கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் மட்டும் ரூ.170 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply