2020ஆம் ஆண்டிற்கான பெருநிலவு…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


2020 ஆம் ஆண்டிற்கான சூப்பர் மூன் என்று அழைக்கப்படும் பெருநிலவு இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட இடங்களில் தென்பட்டது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பார்க்க முடிந்தது. வழக்கமான முழுநிலவு நாளன்று பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்போது பெரிதாகவும் வெளிச்சமாகவும் காட்சியளிக்கும் நிகழ்வை பெருநிலவு அதாவது சூப்பர் மூன் என்று வானியல் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

 

கொரொனா வைரஸை கட்டுப்படுத்தவே மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு பட்டுள்ளதால் நிலவிவரும் தனிமைக்கு இனிமை சேர்க்கும் விதமாக வழக்கத்தைவிட வெளிச்சமாக வெள்ளி போன்ற நிலா வருகிறது.

 

தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தோன்றியது போலவே தெற்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் பெருநிலவு காட்சியளித்தது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி இதே போன்ற நிகழ்வு நிகழும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Leave a Reply