பெண்ணை கிண்டல் செய்த வாலிபரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினரை கண்டித்து கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் 50 க்கும் மேற்பட்டோர் சாலைமறியல்.அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் சூர்யா ( வயது 26 ).இவர் நேற்று நண்பர்கள் மூவருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு தனது வீட்டின் அருகே வசித்து வந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி கிண்டல் செய்துள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.இதுகுறித்த விசாரணைக்காக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வாலிபர் சூர்யாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

 

அப்போது , வாலிபர் சூர்யாவை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்செல்லாமல் தங்கள் வீட்டிலேயே விசாரணை செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து பெண்ணை கிண்டல் செய்த வாலிபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்ற காவல் துறையினரை கண்டித்து கோவை – மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் சூர்யாவின் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.மேலும்,அச்சாலையில் வந்து கொண்டிருந்த வாகனங்களையும் அனுமதிக்காமல் ஓட்டுநர்களுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இச்சம்பவம் குறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது,காவல்துறையினருடன் சூர்யாவின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கோவை – மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த மறியலால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Leave a Reply