--- --:--:-- --

நேர்த்திக்கடன் செலுத்த வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்!

4

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ரத்து செய்யப் பட்டிருக்கும் நிலையில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வைகை ஆற்றுக்கு வந்த பக்தர்களை காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

 

கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று நடைபெறவிருந்த கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வைகை ஆற்றுக்கு வந்தனர்.

 

மேலும் முனியாண்டி வேடமிட்டும் பலர் நேர்த்தி கடன் செலுத்த வந்திருந்தனர். இதனை அறிந்த காவலர்கள் உடனடியாக அனைவரையும் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் வைகை ஆற்றின் அருகில் உள்ள ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள ஒருவர் தனது வீட்டில் குதிரையில் கள்ளழகர் எழுந்தருளுவது போன்ற சிலையை வைத்து வழிபாடு செய்தார்.

 

இதனை பார்க்க ஏராளமானோர் வந்ததால் அவர்களையும் காவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon