இந்தியாவில் கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாடு முழுவதும் கொரொனா வைரஸ் பரவி வரும் சூழலில் தேவை அதிகரிப்பு காரணமாக ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

 

கொரொனா வைரஸிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை கூறிவரும் நிலையில் ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட கிருமினாசினியும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

அதனால் அதன் தேவை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


Leave a Reply