நிதி ஆதாரங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுக…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


எதை கேட்டாலும் அரசின் நிதி நிலையை காரணம் காட்டும் தமிழக அரசு மாநில நிதி ஆதாரங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி விடுத்த அழைப்பின் பேரில் நடந்த போராட்டத்தில் மக்கள் எழுப்பிய முழக்ககங்களின் பேரொலி முதலமைச்சரின் காதுகளில் எதிரொலித்துக் பதற்றத்தை அதிகப்படுத்தி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழக அரசிடம் எதை கேட்டாலும் நிதி நிலைமையை காரணம் காட்டுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மாநில நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

அதில் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அதுதான் தொழில்துறையினர் தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிட உதவும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தை மீட்க அரசுக்கு தெரிந்த ஒரே வழியாக மதுபான கடைகள் மட்டுமே இருப்பது அவமானம் என்றும் ஸ்டாலின் சாடியுள்ளார்.


Leave a Reply