1007….. ! இதுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம் தெரியுங்களா…?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 1007 பேர் பலியாகி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974- லிருந்து 31,332 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 937- லிருந்து 1,007 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,027- லிருந்து 7,696 ஆக அதிகரித்துள்ளது.

 

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 9,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,388 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

குஜராத்தில் 3,744, டெல்லியில் 3,314, மத்திய பிரதேசத்தில் 2,387, ராஜஸ்தானில் 2,364, தமிழகத்தில் 2,058, உத்தரப்பிரதேசத்தில் 2,053, ஆந்திராவில் 1,259, தெலுங்கானாவில் 1,004, கர்நாடகாவில் 523, கேரளாவில் 485, புதுச்சேரியில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 


Leave a Reply